கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிகர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் பர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இதை  தொடர்ந்து வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தனுஷ் அவர்களின் பிறந்தநாளான்று,

படத்திற்கான டீசர் அல்லது ஏதேனும் பாடல் வெளியிடப்படலாம் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படம் சூழ்நிலையில், தற்போது படம் குறித்த மற்றொரு புதிய அப்டேட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி, கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தனுஷ் அவர்களுக்கு அண்ணனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.