மாஸ்டர் படத்தின் இன்ட்ரோ காட்சிகளை இளைஞர் ஒருவர் அப்படியே ரீ கிரியேட் செய்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் அவர்களின் மற்ற படங்களை காட்டிலும், இந்த படம் சற்று வித்தியாசமாக பலதரப்பட்ட மக்களுக்கும் பிடித்த வகையில் அமைந்திருக்கும். படத்தில் விஜய்யின் JD  கதாபாத்திரம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் பலருக்கும் மனதில் இருந்து நீக்க முடியாத கதாபாத்திரமாக திகழ்கிறது.

படம் வெளியான தருணத்தில் பலரும் JD  போல் தங்களை சித்தரித்து சமூக வலைதல் பதிவிட்டு வந்தனர். அதே ட்ரெண்ட் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி,  இளைஞர் ஒருவர் மாஸ்டர் படத்தில் வரக்கூடிய JD கதாப்பாத்திரத்தின் intro  காட்சி, மெட்ரோ காட்சிகள் ஆகியவற்றை படத்தில் உள்ளவாறு அச்சு அசலாக அப்படியே சித்தரித்து அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.