சமீபத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். குறிப்பாக, நயினார் நாகேந்திரனை “பேரன்பிற்குரிய மாமா” என்று செல்லமாக அழைத்து பாஜக ஆதரவுத் தொனியில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்நிலையில், அதற்கு முற்றிலும் முரணாகச் சீமான் அவர்கள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கடுமையாகச் சாடிப் பேசிய பழைய காணொளி ஒன்றை நெட்டிசன்கள் தற்போது சமூக வலைதளங்களில் பாஜகவினரின் கண்ணில் படும்படி வைரலாக்கி வருகின்றனர்.
அந்தப் பழைய வீடியோவில், “நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்களே?” எனச் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சீமான் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். அதில், “இந்த நாட்டில் உண்மையிலேயே தடை செய்யப்பட வேண்டிய ஒரே விஷயம் ஆர்.எஸ்.எஸ் தான். அது ஏற்கனவே மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்.
அப்படித் தடை செய்யப்பட்ட இயக்கத்தை நீங்கள் ஏன் ஆதரித்தீர்கள்? வல்லபாய் பட்டேல்தான் அந்தத் தடையை நீக்கினார் என்பதால் தானே அவருக்குச் சிலை வைத்திருக்கிறீர்கள்? இல்லையென்றால் இந்த நாட்டுக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நாட்டின் பெருமையைக் காத்தது காந்தியும் அம்பேத்கரும்தான்.
அவர்களுக்குச் சிலை வைக்காத நீங்கள் வல்லபாய் பட்டேலுக்கு ஏன் சிலை வைத்தீர்கள்? இந்த நாட்டின் உண்மையான பிரிவினைவாதிகளே மோடியும் அமித் ஷாவும்தான்” என்று சீமான் மிகக் காட்டமாகப் பேசியுள்ளார்.
செந்தமிழன் செபாஸ்டின் சைமனின் (சீமான்) @Seeman4TN திடீர் மாமா நயினார் நாகேந்திரன் கண்ணில் படும் வரை பகிரவும்.. @NainarBJP
நயினார் நாகேந்திரனின் மாப்பிள்ளை சீமான் 4 வருடங்கள் முன்பு பேசிய அந்த சர்ச்சைக்குரிய
பழைய காணொளி ✅ pic.twitter.com/o2DQfP9ZP3— கழுகுப்பார்வை 🦅🇮🇳 (@TheEagle3_0) July 26, 2026
பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு “மாமா நயினார் நாகேந்திரன்” என்று பாஜகவிற்கு ஆதரவாகப் பேசிய சீமானின் தற்போதைய நிலைப்பாட்டையும், அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்த இந்தப் பழைய வீடியோவையும் ஒன்றாக இணைத்து, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்களை எழுப்பி வருகின்றனர்.
