லியோ திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் கேமியோவில் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்ததாக கூறப்பட்டு வந்தாலும், படத்தின் கேமியோ ரோல் சேர்ப்பதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நெட்டிசன்கள் கடைசியாக அனுராக் கேஷியாப் இணைந்த போது கலாய்த்து வந்தனர். இந்நிலையில் திரைப்படம் LCU  வில் இடம்பெருமா ? இடம்பெறாதா ? என்ற கேள்வி பலருக்கும் இருக்க,

LCU வில் அமைய வேண்டும் என்பதே பலரின் ஆசையாகவுள்ளது. LCU மீதான தீராத மோகத்திற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரம் தான். இந்நிலையில் லியோவில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் படத்தில் நடித்த காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சூட்டிங் முடிந்ததாக கூறப்பட்ட நிலையில் இத்தகவல் உண்மையா? பொய்யா? என ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, உண்மையாக இருக்கும் பட்சத்தில் இப்படம் கைதிக்கு பின்  விக்ரம் படத்திற்கு முன் உள்ள கதைக்களமாக லியோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.