ஜூலை 28ஆம் தேதி ஜெயிலர்  திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள ஜெய்லர் திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான இசை வெளியீட்டு விழாவிற்கான  அதிகாரப்பூர்வ தேதி  தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூலை 28ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தின் உள் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

வ்விழாவில் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோலிவுட்-ல்  மோகன் லால், சாண்டல்வுட்-ல் சிவராஜ்குமார் பாலிவுட்டில் தமன்னா என அனைத்து திரையுலகும் இணைய இருப்பதால், மிக பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக இதை நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.