நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான அப்டேட் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மலையாள சினிமாவில் வெளிவந்த ஜெய ஜெய ஜெயகே திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மக்களிடையேயும்  கணிசமான வரவேற்பை இத்திரைப்படம் பெற்றது. படத்தின் பல இடங்களில் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவும், அதேசமயம் சிந்திக்கவும் வைத்திருப்பார் படத்தின் இயக்குனர் விபின் தாஸ். இவருடைய முந்தைய சில படங்களும் மலையாளத்தில் நல்ல ஹிட் கொடுத்த படங்கள் தான்.

இந்நிலையில் இயக்குனர் விபின் தாஸ் தனது அடுத்த படத்தை தமிழில் இயக்க முடிவு செய்துள்ளார். இதற்கு கதாநாயகனாக விஜய் சேதுபதி அவர்களும், கதாநாயகியாக கங்கனா ரனாவத் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி பன்முகத் தன்மை கொண்ட நடிகர், இயக்குனர் விபின் தாஸ்  மலையாள சினிமாவில் நற்பெயர் பெற்ற இயக்குனர், கதாநாயகி கங்கனா ரனாவத்  ஏற்கனவே தமிழில் தலைவி, தாம் தூம்  ஆகிய இரு படங்களில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். இவர்களுடைய காம்போ அசத்தலாக இருப்பதாகவும், நல்ல ஒரு FEEL GOOD  படத்தை எதிர்பார்க்கலாம் எனவும் சினிமா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.