ஹைதராபாத் அருகே உள்ள செகந்தராபாத் பகுதியில், மருமகள் ஒருவர் தனது மாமியாரை சமையலறை கத்தியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்ட பத்மாவதி என்ற பெண்மணி படுகாயமடைந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த சொத்துத் தகராறே முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளில், 33 வயதான அந்தப் பெண், தனது மாமியாரின் தலைமுடியைப் பிடித்து கொடூரமாக இழுத்துத் தள்ளி, கத்தியால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இக்காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
இந்நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாமியாரைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக 33 வயது நிரம்பிய அந்த மருமகளை உடனடியாகக் கைது செய்து காவலில் எடுத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் பறிமுதல் செய்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த பத்மாவதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Family property dispute turns violent: Woman attacks mother-in-law with knife in Hyderabad, held pic.twitter.com/4p7LQP63hs
— Shakeel Yasar Ullah (@yasarullah) July 22, 2026
“>
