கடலூர் மாவட்டம் முதுநகர் சாலக்கரையில் முத்துமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெற்று சடல் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து விரதம் இருந்த திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசித்தனர்.
இந்நிலையில் சில பக்தர்கள் மிளகாய் பொடியை கரைத்து உடலில் ஊற்றியும், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடை சுட்டும் முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் வினோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
