கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கான்வாய் காருக்குப்பின் பயணித்த பைலட் கார் விபத்துக்குள்ளானது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த சனிக்கிழமை மாலை மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரங்கப்பட்டனா பகுதியில் உள்ள விரைவுச் சாலையில் அருகே சிவக்குமார் பயணித்த காருக்கு பின்னால் வந்த பைலட் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள தடுப்புச் சுவரின் மீது மோதிக் கவிழ்ந்தது.

அதில் பயணித்த பணியாளர்கள் 5 பலத்த காயமடைந்துள்ளனர். அந்த விபத்தில் ஓட்டுநர் நொடிப் பொழுதில் உயிர் தப்பினார். இச்சம்பவத்தை அடுத்து காயம் அடைந்தவர்கள் மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு முறையாக சிகிச்சை கிடைப்பது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சிவகுமார் உத்தரவிட்டார். அதன் பின்னர் துணை முதல்வர் சிவகுமார் பெங்களூருக்கு திரும்பினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.