மேஷ ராசி அன்பர்களே…!  இன்று வீண் விரையம் கொஞ்சம் ஏற்படக்கூடும். காரியங்களை நீங்கள் நிதானமாக செய்வது நல்லது. எடுத்தோம் கவுத்தோம் என்று  முடிவு எடுக்க வேண்டாம். மன பதட்டம் தயவு செய்து கொள்ளாதீர்கள். முடித்தளவு பணத்தை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். உங்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டவரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், பெரும் தன்மையுடன் விலகி செல்வதால் நிலைமை எல்லாம் சீராகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி ஓரளவு நிறைவேற கூடும்.

பண வரவை விட செலவுகள் ஒரு பக்கம் அதிகரிக்கும். வாகனத்தின் மித வேகத்தை பின்பற்றுவது நல்லது. விருந்து,  கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். பண வரவும் சீராக இருக்க கூடும். காரியத் தடங்கள் ஏற்பட்டாலும்,  கண்டிப்பாக சரியாக கூடும். முன்னேற்றமான சூழலை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள். கூடுதல் முயற்சிகள் மேற்கொண்டு,  காரியங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

விளையாட்டு துறையில் வெற்றி பெறக்கூடிய சூழல் இருக்கின்றது. கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் ஏற்படக்கூடும். நமக்கு மட்டும் நல்லது நடக்கவில்லயே  என்ற கவலைகள் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கும். கண்டிப்பாக உங்களுடைய மன மாற்றம் இருந்தால், வெற்றி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும்,  எடுத்த வேலையை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கடுமையான உழைப்பு இருக்கும். இன்று பெண்கள் சுபயோக வாழ்க்கை அனுபவிப்பீர்கள், காரியங்களை மிக அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

பெண்கள் இன்று முயற்சியின் பெயரில் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.  காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இருக்காது. சுலபமான காதல் தான் அமையும். காதலுக்காக நேரம் செலவிட வேண்டாம். செய்யும் பணியில் கவனம் செலுத்துங்கள்,  அது போதும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். கல்வி பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும்.

உயர் கல்வி உங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்து விடும். முயற்சி பண்ணுங்கள்,  எளிமையாக வெற்றி பெறலாம்.  முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  அப்படியே அந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் கண்டிப்பாக அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு,  எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள், நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

மேஷத்துக்ககான  அதிர்ஷ்டமான திசை: தெற்கு

மேஷத்துக்ககான அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

மேஷத்துக்ககான அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்