வீட்டில் பொதுவாக எந்த நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும் எப்போது பூஜை செய்ய வேண்டும் அதனைப் போலவே கற்பூரதீபம் காட்ட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் பல உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நேரத்தில் விளக்கு ஏற்றுவது என்பது மிகவும் நல்லது என்றும் சில நேரங்களில் தீபம் மற்றும் கற்பூரம் ஏற்றக்கூடாது என்றும் வாஸ்து ஜோதிடத்தில் உள்ளது. கற்பூரம் அனைத்து பூஜைகளிலும் தவறாமல் இடம்பெறும் மங்களமான பூஜை பொருட்களில் ஒன்றாக உள்ளது. கற்பூரம் ஏற்றும்போது வீடு முழுவதும் ஒருவிதமான பாசிட்டிவ் எனர்ஜி வெளிப்படும். இருந்தாலும் கற்பூரத்தை சரியான முறையில் சரியான நேரத்தில் ஏற்ற வேண்டும். வேத ஜோதிடர்களின் கருத்துப்படி எப்போதுமே பிரம்ம முகூர்த்தத்தில் கற்பூரம் ஏற்றலாம்.

பிரம்ம முகூர்த்தம் மிகவும் சுபிட்சமாகவும் நாள் முழுவதும் நேர்மறை ஆற்றலையும் கொடுக்கக்கூடியது. அதனைப் போலவே தினசரி காலையில் வீட்டின் முன்பு கற்பூரம் ஏற்றி வைத்தால் நல்லது. மாலை நேரத்தில் விளக்கு ஏற்றும் போதும் அல்லது மாலை நேரத்தில் பூஜை செய்யும் போது கற்பூரம் ஏற்றலாம். மேலும் ஒவ்வொரு முறை விளக்கேற்றும் போதும் கற்பூரம் ஏற்றுவது வீட்டிற்கு நல்லது. ஆனால் காலை நேரத்தில் பூஜை செய்யும்போது கற்பூரம் ஏற்றக்கூடாது என்று வாஸ்து ஜோதிடர்கள் கூறுகிறார்கள். காலையில் வீட்டில் நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு தான் ஏற்ற வேண்டும்.

அதுதான் வீட்டிற்கு நல்லது என்றும் கற்பூரத்தை காட்டக்கூடாது என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். மேலும் கற்பூரத்தை வீட்டில் சிறிய பானையில் ஏற்றக்கூடாது. எப்போதும் தீபம் கற்பூரம் ஏற்றுவதற்கு பித்தளையால் செய்யப்பட்ட கற்பூர ஆரத்தி தட்டு அல்லது தூபக்கால் வைத்து தான் கற்பூரம் ஏற்ற வேண்டும். பித்தளை விளக்கில் தீபம் ஏற்றுவதை வீட்டில் சுபிட்சத்தை உண்டாக்கும். இரவு நேரத்தில் அனைவரும் தூங்க செல்வதற்கு முன்பு வீட்டின் ஏதாவது மூலையில் கற்பூரத்தை ஏற்றினால் இரவில் வீட்டில் நிம்மதியாக இருக்கும் சூழல் நிலவும்.