நவராத்திரி சோழர்கள் காலத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் அம்பிகைக்கு 9 விதமான புஷ்பங்களை கொண்டு 9 விதமான அலங்காரங்கள் செய்யப்படும். வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவதுதான். அப்படி வைக்கும் கொலு படிகளை ஐந்து, ஏழு மட்டும் ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்க வேண்டும்.

கொலு வைக்கும் போது முதல் படியில் ஓர் இரவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகள் வைக்க வேண்டும்.

இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும்.

மூன்றாவது படியில் மூன்று அறிவு கொண்ட எறும்பு மற்றும் கரையான் போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும்

நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிரினங்களான நண்டு மற்றும் வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகளை வைக்கலாம்.

ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.

ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள் மற்றும் நவகிரகங்களின் பொம்மைகளை வைக்கலாம்.

ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்கலாம். அதேசமயம் இவை அனைத்தும் நடு நாயகனாக விநாயக பெருமானையும் ஆதிபராசக்தியும் வைத்து வழிபடலாம்.