புகழ்பெற்ற கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் தெற்கு நோக்கி கோவில் கொண்ட நிலையில் நவ கன்னியர்கள் உள்ளனர். இந்த கன்னியர்களை வழிபடுவதும், அர்ச்சிப்பதும் மகாமக யாத்திரையில் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஆகும் இந்நிலையில் ஒன்பது நதிகளும் 9 கன்னியராக காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

மகாமக வருஷம் குருவின் சிம்ம ராசி பிரவேசத்தில் தொடங்குவதால் அன்று முதல் நவக்கண்ணியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம். எனவே தினந்தோறும் நவ கன்னியருக்கு அந்த ஆண்டில் தைலக்காப்பு செய்வார்கள். அதனை செய்வதற்கு நாம் எண்ணெய் வாங்கிக் கொடுப்பது புண்ணியம் செய்வதற்கு சமம். மேலும் நமது புராணங்களில் செவ்வாய் கிழமைகளில் நவ கன்னியரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என கூறப்படுகிறது.

மகாமகம் தீர்த்தத்தில் குளிப்பவர் யாராக இருந்தாலும் நவ கன்னியர்களை வணங்குவது மிகவும் அவசியம். நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப சந்தனமும், மஞ்சளும், எண்ணெயும், மனம் பொருந்திய மலர்களையும் வைத்து பூஜை செய்யலாம். இதனையடுத்து பால் சாதம் நிவேதித்து தட்சிணையுடன் கூடிய தாம்பூலத்தை கொடுக்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு சென்று 9 கன்னியரை நினைத்து 9 சுமங்கலிக்கு நமது சக்திக்கு ஏற்ப தாம்பூலம் கொடுத்து வணங்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து வழிபட்டால் புத்திர வாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். இதனையடுத்து பருவம் எய்தாதவர்கள் பருவம் எழுதி நல்ல கணவனை பெற்று நீடூடி வாழ்வார்கள். கணவனோடு கருத்து வேறுபாடு இருந்தால் கணவனோடு மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். வியாதிகளில் இருந்து மீண்டு பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். திரு குடந்தை புராணம் அருந்ததி, அனசுயை, சாயை, தமயந்தி, சசி, ருக்மணி ஆகியோர் நவ கன்னியரை வழிபட்டு பெரும் பேறு பெற்றவர்கள் என்பதை குறிப்பிடுகிறது.

கணவனை இழந்த பெண்கள் நவ கண்ணீரை வழிபட்டால் அடுத்த ஜென்மத்தில் செல்வ வளமும் நல்ல கணவனும் வாய்க்கப் பெற்று நிலைத்த இன்பத்தை பெறுவார்கள் என்பது ஐதீகம். இவ்வாறு பல நன்மைகளைத் தரும் நவ கன்னியருக்கு மகாமக ஆண்டில் நல்ல நாட்களில் தைலாபிஷேகம் செய்வது நற்பலன்களை தரும்.