மேஷம்

இன்று இல்லத்திற்கு உறவினர்கள் வருகை தருவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாட்கள் உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். குடும்பத்தினர் இடையே ஒத்துழைப்பு காணப்படும். இன்றைய தினம் வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மன உளைச்சல் ஏற்படலாம். செய்யும் பணிகளில் காலதாமதம் ஏற்படும். பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்கவும்.

மிதுனம்

இன்று இல்லத்தில் சுப செலவுகள் உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கப்பெறும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமானதாக இருக்கும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய தினம் நல்லதே நடக்கும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி கொடுக்கும். சிந்தித்து செயல்படுவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கவனமுடன் இருப்பது நல்லது. இன்றைய தினம் தொழிலில் கூட்டாளிகளால் நல்லது நடக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சிக்கனமாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் குறையும். மருத்துவ செலவு ஏற்படக்கூடும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இன்றைய தினம் பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர்.

துலாம்

இன்று உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். இன்றைய தினம் நிலுவையில் இருந்த கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளை சிந்தித்து எடுப்பது நல்லது. பயணங்களால் நல்லதே நடக்கும். எதிர்பாராத செலவுகள் உருவாகலாம். உடன் இருப்பவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். இன்றைய தினம் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு

இன்று பணவரவு சிறந்த அளவில் இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இல்லத்தில் செலவுகள் அதிகமாக காணப்படும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். இன்றைய தினம் புதிதாய் வீட்டிற்கு பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

மகரம்

இன்று இல்லத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பண பிரச்சனை உருவாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இன்றைய தினம் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.

கும்பம்

இன்று இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் பேச்சுவார்த்தைகளால் முன்னேற்றத்தை காண முடியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப்பெறும். பெற்றோரிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை ஆகாலும். இன்றைய தினம் தர்ம காரியங்கள் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்

இன்று இல்லத்தில் அமைதியான சூழல் உருவாகும். தொழிலில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபம் பெற முடியும். பூர்விக செத்துக்களால் நல்லது நடக்கும். சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் அகழும். இன்றைய தினம் ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.