மேஷம்

இன்று பிற்பகல் வரை உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.  முக்கியமான செயல்களை மதியத்திற்கு பிறகு செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.  இன்று சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வுடன் காணப்படுவீர்கள்.  இன்றைய தினம் பண பிரச்சனைகள் தீரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் செய்யும் செயல்களில் தடங்கல் ஏற்படக்கூடும். உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது.  மன அமைதி பாதிக்கப்படும்.  இன்றைய தினம் வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

இன்று இல்லத்தில் சுப செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்க பெறுவீர்கள்.  உடல் ஆரோக்கியம் சீராகும் . திருமணம் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும்.  இன்றைய தினம் புதிய பொருட்களை வாங்கும் யோகம் உள்ளது.

கடகம்

இன்று வாகனங்களால் மேல் செலவு ஏற்படும்.  உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.  சிக்கனத்தை கடைபிடிப்பதால் கடன்கள் குறையும்.  இன்றைய தினம் உறவினர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இந்த பிள்ளைகளால் குடும்பத்தினர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்க பெறும்.  பண வரவுகள் இன்று சுமாராகத்தான் இருக்கும்.  பங்குதாரர்களின் உதவி வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை நீக்கும்.  இன்றைய தினம் முன்னேற்றம் காணப்படும்.

கன்னி

இன்று ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும்.  இல்லத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். இன்று  லாபம் அதிகரிக்கும்.  பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க பெறும்.  ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். இன்றைய தினம் உங்கள் தேவைகள் பூர்த்தியடையும்.

துலாம்

இந்த குடும்பத்தில் திடீர் செலவுகள் வரக்கூடும் . புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் தள்ளி போகும்.  உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறும்.  மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.  இன்றைய தினம் எந்த செயலையும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செய்வது நல்லது.

விருச்சிகம்

இன்று தொழில் தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும் . இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும்.  பிள்ளைகள் படிப்பில் அக்கறை கொண்டு முன்னேற்றம் காண்பார்கள்.  பணி தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.  நிலுவையில் இருந்த கடன்கள் வசூல் ஆகும்.  இன்றைய தினம் எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தினர் உங்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் . உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க கூடும் . விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.  இன்றைய தினம் தெய்வ வழிபாட்டின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

மகரம்

இன்று உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும்.   இன்று  முன்னேற்றமான சூழல் காணப்படும்.  பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப்பெறும்.  தொழிற் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும்.  இன்றைய தினம் உத்தியோகஸ்தர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழல் உருவாகும்.  பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படக்கூடும்.  தொழிலில் பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.  தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  இன்றைய தினம் பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்

இன்று உங்க பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.  புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  சுப காரியங்கள் கைகூடிவரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை குறையும்.  இன்றைய தினம் வியாபாரம் சிறந்து விளங்கும்.