மேஷம்

இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பொருளாதார ரீதியாக எந்த ஒரு புதிய முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்

இன்று பெற்றோர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை கூடுதலாக இருக்கும். நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மன உறுதியோடு எதிர்கொள்வீர்கள். இன்றைய தினம் நினைத்த காரியம் நிறைவேறும்.

மிதுனம்

இன்று உறவினர்களின்  இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வதால் பண பிரச்சனையில் இருந்து தீர்வு காண முடியும். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறும். வெளியிடங்களில் கிடைக்கும் நட்பு ஆறுதலை கொடுக்கும் .பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றத்தை காண்பார்கள். இன்றைய தினம் கடன்கள் குறையும்.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் வருகையினால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் லாபம் குறைவடையும். இன்றைய தினம் சுப காரியங்கள் கை கூடி வரும்.

சிம்மம்

இன்று தொழிலில் சலுகைகள் அறிவிப்பதன் மூலம் லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடம் மாற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். வீடு தேடி நல்ல செய்தி வரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். இன்றைய தினம் சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி

இன்று பூர்வீக சொத்துக்களால் நல்லது நடக்கும் .பிள்ளைகளால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்கள் கொடுக்கும் ஆலோசனை வியாபாரத்தை சிறப்பாக நடத்த உதவும். இன்று பணவரவு அமோகமாக இருக்கும் .வருமானம் திருப்தி அளிக்கும். இன்றைய தினம் புதிதாய் பொருட்கள் வாங்கும் யோகம் உள்ளது.

துலாம்

இன்று உறவினர்களால் வீண் மன கஷ்டங்கள் உருவாகலாம் . விட்டுக் கொடுத்து செல்வதால் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்க முடியும் . பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது . இன்று வரவுக்கு மீறிய செலவு ஏற்படக்கூடும்  . இன்றைய தினம் உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

விருச்சிகம்

இன்று பெற்றோரின் அன்பு பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் . பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் எடுத்துக் கொள்வார்கள் . தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  குடும்பத்தில் பொருளாதாரம் சிறந்த அளவில் காணப்படும்.  இன்றைய தினம் பணியிடத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

இன்று குடும்பத்தினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது .ஆரோக்கியத்திலும் கவனம் தேவை . தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை கூடும் . புதிய பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்கவும்.  இன்றைய தினம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும்.

மகரம்

இன்று இல்லத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பாராட்டுக்கள்  பெறுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக செயல்படுத்திய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். இன்றைய தினம் உறவினர்களால் நன்மை உண்டாகும்.

கும்பம்

இன்று திருமண பேச்சு வார்த்தைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும் .புதிய முயற்சி எடுப்பதனால் அனுகூலமான பலனை பெற முடியும் . பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.  குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலைத்திருக்கும்.  இன்றைய தினம் திடீர் பணவரவுகள் ஏற்படும்.

மீனம்

இன்று எந்த செயலையும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செய்வது நல்லது.  எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்காமல் ஏமாற்றம்தான் மிஞ்சும்.  உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.  வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும் . இன்றைய தினம் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.