மேஷம்

இன்று ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு சுப காரியத்திலும் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும். ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். செய்யும் செயல்களில் தடைகள் உருவாகலாம். இன்றைய தினம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடவும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்றைய தினம் சுப காரியங்கள் கைகூடிவரும்.

மிதுனம்

இன்று நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எந்த செயலையும் தடையின்றி நீங்கள் செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். பயணங்களில் நற்பலன் கிடைக்கும். இன்றைய தினம் வீட்டு தேவைகள் நிறைவேறும்.

கடகம்

இன்று எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செய்வது நல்லது. இதனால் வெற்றி உங்கள் வசமாகும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலமாக அவர்களது அன்பை பெறுவீர்கள். வேற்று மொழி பேசும் நபரால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்றைய தினம் அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். நீங்கள் செய்யும் எந்த காரியத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். பெண்கள் இன்று சிக்கனமாக செயல்படுவார்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்க பெறும். பொருளாதார சூழல் சிறப்பாக இருக்கும். இன்றைய தினம் பொன் பொருள் சேரும் நாள்.

கன்னி

இன்று தொழிலில் பங்குதாரர்களின் உதவியால் லாபம் ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் உதவி மூலம் கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தினர் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். சுப காரிய முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். இன்றைய தினம் நிலுவையில் இருந்த கடன் வசூல் ஆகும்.

துலாம்

இன்று இல்லத்தில் மகிழ்ச்சியற்ற சூழல் உருவாகும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது தேவையற்ற பிரச்சனைகளில் சிக்காமல் தடுக்கும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். இன்றைய தினம் அயராத உழைப்பினால் நல்ல முன்னேற்றத்தை வியாபாரத்தில் பார்க்கலாம்.

விருச்சிகம்

இன்று எந்த ஒரு வேலையிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். இன்றைய தினம் வருமானம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். இல்லத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தலை தூக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவ முன் வருவார்கள். உடன் பிறந்தவர்கள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் அதிக லாபத்தை பார்க்கலாம். இன்றைய தினம் தெய்வ வழிபாடு நன்மை பயக்கும்.

மகரம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடக்கும். எந்த செயலிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். இன்றைய தினம் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கும். பணக்கஷ்டம் தீரும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படலாம். தொழில் தொடர்பாக எடுத்த புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் அதிக ஈடுபாடுடன் இருப்பீர்கள். இன்றைய தினம் ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்திலிருந்த போட்டி பொறாமைகள் அகலும் .பெரியவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பயணங்களால் சோர்வு ஏற்படும். இன்றைய தினம் பொருளாதார நெருக்கடிகள் அகலும்.