மேஷ ராசி அன்பர்களே

இன்று நல்ல நாளாகவே உங்களுக்கு உள்ளது. நிலுவையில் இருந்த கடன்கள் வசூல் ஆகும். பணவரவு இன்று தாராளமாக இருக்கும். மனைவி மூலமாக இன்று உங்களுக்கு நல்லதே நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் அனுகூலம் பெறுவீர்கள். இன்றைய தினம் குழந்தைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ரிஷப ராசி அன்பர்களே…

இன்று இல்லத்தில் சுப செலவுகளை சந்திக்க வேண்டி வரும். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். இன்றைய தினம் பெரிய மனிதர்களின் அன்பு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே…

இன்று பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்த இடம் மாற்றம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் அகலும். உடன் பிறந்தவர்களுடன் சிறிய கருத்து வேறுபாடு ஏற்படும். கவனமாக இருங்கள். இன்றைய தினம் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கடக ராசி அன்பர்களே…

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். கவனமாக இருங்கள். தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது லாபத்திற்கு வழிவகுக்கும். இல்லத்தில் இன்று நிம்மதியற்ற சூழல் உருவாகும். உறவினர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறும். இன்றைய தினம் கடன் சுமை குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே…

இன்று நீங்கள் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். பெண்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமண முயற்சிகளில் நல்ல பலன் உண்டு. பணி நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்றைய தினம் சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே…

இன்று உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். குடும்பத்தில் தேவையில்லாத செலவு ஏற்படும். தொழில் நிமித்தமாக வீண் அலைச்சல் உண்டாகலாம். பொருளாதார நெருக்கடிகள் குறைய எதிர்பாராத வகையில் உதவி கிடைக்கும். இன்றைய தினம் தெய்வ வழிபாட்டின் மூலம் நல்லது நடக்கும்.

துலாம் ராசி அன்பர்களே…

இன்று குடும்பத்தினர் இடையே ஒற்றுமையான சூழல் நிலவும். பொருளாதார நிலை சிறந்த அளவில் காணப்படும். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களை பெறுவீர்கள். வீட்டு தேவைகளை நிவர்த்தி செய்வீர்கள். இன்றைய தினம் வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே…

இன்று நீங்கள் சுறுசுறுப்பு இன்றி காணப்படுவீர்கள். வியாபாரத்தில் மறைமுகமாக எதிரிகளால் பிரச்சனை ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாகனங்களால் வீண் செலவு ஏற்படக்கூடும். இன்றைய தினம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க பெறும்.

தனுசு ராசி அன்பர்களே…

இன்று தொழில் நிமித்தமாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். குழந்தைகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெற்று மகிழ்வீர்கள். இன்றைய தினம் குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே…

இன்று தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். இன்றைய தினம் காலையிலேயே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறும்.

கும்ப ராசி அன்பர்களே…

இன்று தொழில் தொடங்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பயணத்தின் போது பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று எந்த ஒரு பணியிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். இன்றைய தினம் திடீர் பணவரவு இருக்கும்.

மீன ராசி அன்பர்களே…

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் எதையும் இன்று மேற்கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். இன்றைய தினம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.