விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களின் ஒருவரான டிடி தற்போது படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார். இவரது காபி வித் டிடி நிகழ்ச்சியை ரசிகர்கள் மிஸ் செய்கிறார்கள். விரைவில் வேறு ஒரு நிகழ்ச்சியுடன் டிடி கம் பேக் கொடுப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் டிடி ஸ்டோரி பக்கத்தில் மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.