நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் நடித்த போது ஜோடியாக நடித்த நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களின் சம்பந்தத்துடன் இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஆரியனா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆரியனாவை பார்ப்பதற்கு சாயீஷா போலவே இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CnG-IpzyCI-/?utm_source=ig_embed&ig_rid=35c8ff39-23da-463b-934a-ae7b1ef2c24d