நடிகை தமன்னாவின் நடிப்பில் ஆக்சன் திரைப்படம் கடைசியாக தமிழில் வெளிவந்தது. அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தமன்னா பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவிற்கு அது உண்மை தகவல் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா ஒரு பார்ட்டியில் நெருக்கமாக இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது நடிகை தமன்னா இந்த ஆண்டு நடிகர் விஜய் வர்மாவை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தமன்னா தரப்பிலிருந்து இந்த செய்தி விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.