தமிழ் திரையுலகில் காமெடியனாக சந்தானம் தனது பயணத்தை தொடங்கினார். இவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. கிக் என்னும் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கும் சந்தானம் அடுத்ததாக காமெடியனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அஜித் நடிப்பில் உருவாக விருக்கும் “ஏகே 62” படத்தில் சந்தானம் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தில் அவர் காமெடியனாக தான் நடிக்கிறாரா? என்பது உறுதியாகவில்லை. இந்த படத்திற்கு சந்தானம் 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வருகிற 17-ஆம் தேதி முதல் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.