செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் தற்போது நடைபாதைகள்,  அதேபோல் பேட்டரி கார்கள், அதேபோல் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உணவகங்கள், மருத்துவமனை போன்றவை முழு நேரம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. கூடுதலாக பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்தையும் குறித்துக் கொண்டிருக்கின்றோம். படிப்படியாக….. ஒவ்வொன்றாக…… நிறைவேற்றி இந்த மாத இறுதிக்குள் இந்த பேருந்து நிலையத்தை முழுமையாக இயக்குகின்ற ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி காட்டுவோம்.

இந்த மாத இறுதிக்குள் 2310 பேருந்துகள் தினசரி வந்து செல்லுகின்ற அளவிற்கு…..  குறிப்பாக ஆம்னி  பேருந்துகள் 840 பேருந்துகள் முழுமையாக வந்து செல்லுகின்ற அளவிற்கும்….. அதேபோல் எஸ்.சி. டி. சி 360 பேருந்துகளும்,  டி.என்.எஸ். சி. டி.சி 1110 பேருந்துகளும் முழுமையாக அந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

முழுமையாக இந்த பேருந்துகள் இயங்குகின்ற பொழுது…. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் அளவிற்கு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி கூடுதலாக வருகின்ற பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவோம் என்ற நம்பிக்கையோடு,  அதற்குண்டான பணிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொறுத்த அளவில் 30 சதவீத பேருந்துகள் அதில் இன்னும் ஓராண்டு காலம் இயங்குகின்ற சூழ்நிலை இருக்கின்றது. அதாவது பெங்களூர் போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்கின்ற பேருந்துகள் இன்னும் ஓராண்டு காலத்திற்கு அங்கு இயக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அது முடிந்த பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலோடு,  ஒரு மிகப்பெரிய ஒரு திட்டத்தை அந்த இடத்தில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றோம். அதற்கு உண்டான கருத்துருக்களை பெறப்பட்டு,  அதற்குண்டான அடிப்படை வேலைகளை துவக்க இருக்கின்றோம் என தெரிவித்தார்.