செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மாற்றுதிறனாளிகளை பொறுத்த அளவில் ஐந்து பேட்டரி கார்கள் தற்போது இயங்கப்பட்டு வருகின்றன. MDC பஸ் கிட்டத்தட்ட 7 ஏக்கர் நிலப்பரப்பில்….  சுமார் 60 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்பதற்கு உண்டான வசதி இருக்கின்றது. அந்த பஸ் நிலையத்தை ஒட்டியே லிஃப்ட் இருக்கின்றது. அதேபோல் அந்த பஸ் நிலையத்தை ஒட்டி நேற்று இரவு முழுவதும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உடைய உறுப்பினர் செயலாளர்,

நேற்று விடுமுறை முடிந்து பயணிகள் அதிகமாக திரும்புவார்கள் என்பதை கணக்கிட்டு,  கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று இரவு மாத்திரம்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி இருக்கின்றார்கள். அந்த பயணிகள் உடைய தேவைகளை முழுமையாக அறிந்து,  பேட்டரி கார்கள் ஏற்கனவே 5 இயங்கி கொண்டிருக்கின்றன.  அதை கூடுதலாக்குவதற்கும் மாற்றுதிறனாளிகளுக்கு உதவுவதற்காக தனியாக பணியாளர்களை நியமிப்பதற்கும்,

முடிவெடுத்து இன்றைக்கே மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான உதவிக்கு பணியாளர்களை நியமிப்பது என்று முடிவெடுத்து இருக்கின்றோம். ஏற்கனவே MDC  பஸ் அருகிலேயே இரண்டு லிப்ட் இருக்கின்றது. அதோடு தொடராக மாற்றுதிறனாளிகள் பயன்படுத்துவதற்கு உண்டான  நடைமேடையும் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்துக் கொள்கிறோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொருத்த அளவில் கடந்த காலங்களில் திட்டமிடாமல் செய்யப்பட்ட ஒரு திட்டம் என்றாலும்,

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவுக்கிணங்க…..  ஒரு தடவைக்கு 50 தடவை அந்த பேருந்து நிலையத்தை முழுமையாக ஆய்வு செய்து, 50க்கும் மேற்பட்ட ஆய்வு கூட்டங்களை கூட்டாக பொதுபணித்துறை,  தேசிய நெடுஞ்சாலை,  தமிழகத்தினுடைய நெடுஞ்சாலைத்துறை,  அதேபோல் தீயணைப்புத்துறை, வனத்துறை, காவல்த்துறை,  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைச் சார்ந்த அதிகாரிகள் போன்றவர்கள்,

ஒருங்கிணைந்து ஆய்வுகளை மேற்கொண்டதால் தான் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டது. இல்லை என்றால் ? கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது வார்த்தை அளவில் தான் இருந்திருக்கும்.  இருந்தாலும் பயணிகள் உடைய முழுமையான தேவைகளை படிப்படியாக நிறைவு செய்ய இருக்கின்றோம். பொங்கலுக்குப் பிறகு இந்த மாத இறுதிக்குள் பயணிகளுடைய அனைத்து தேவைகளையும், நிச்சயமாக மாண்புமிகு தமிழக முதல்வர் உடைய ஆட்சி நிறைவு செய்யும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.