ஐபிஎல் 2024 ஐ பொறுத்தவரை யார் கோப்பையை வெல்லுவார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் ஒவ்வொரு போட்டிக்கும் நடுவே மாறிக்கொண்டே வந்தது. முதலில் சிஎஸ்கே அணி இம்முறை கோப்பையை கண்டிப்பாக தட்டிச் செல்லும் என்று நினைத்த நிலையில்,

ஆர்.சி.பி. அணி தொடர்ச்சியாக பெற்ற வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தேர்வான நிலையில், RCB கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆர் சி பி அணி RR அணியிடம் தோல்வி அடையவே SRH அணி வெற்றி பெறும் என பலரும் நினைத்தனர். இந்நிலையில், இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றின் படி முதலில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான அணியே கோப்பையை வென்றுள்ளதாகவும், அதன் படி,

கே கே ஆர் அணி இறுதிச்சுற்றில் முதல் அணியாக தகுதி பெற்றது. அப்போதே பலரும் கே கே ஆர் அணி தான் இம்முறை வெற்றி பெறும் என தங்களது கணிப்பை தெரிவித்து வந்தனர்.

அதுதான் ஐபிஎல் இன் பெரும்பாலான வரலாறாகவும் இருந்திருக்கிறது. அந்த வகையில், தற்போது முதலில் பேட்டிங் செய்த SRH அணி 113 ரன்- களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், அதை கே கே ஆர் அணி சுலபமாக CHASE செய்து வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.