எப்படி நியூட்ரலாக இருக்க வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் இது தொடர்பாக பேசிய அவர், போட்டியின் போது எதற்கும் அதிகமாக உற்சாகமடைய கூடாது என்றும் எந்த ஒரு விஷயத்திற்காகவும் சட்டென்று மனம் தளரக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கிரிக்கெட்டை பொருத்தவரை அப்படி இருப்பது தான் சரியான அணுகுமுறை என குறிப்பிட்டுள்ளார்.