இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக விவிஎஸ் லக்ஷ்மன், ஸ்டீபன் பிளம்மிங், ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங், கௌதம் கம்பீர் ஆகியோர்களில் ஒருவர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில்  தற்போது கௌதம் கம்பீரை  பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ அணுகியுள்ளது.

தற்போது கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஆக இருக்கும் கௌதம் கம்பீர் அதற்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதாவது தன்னை கண்டிப்பாக தேர்வு செய்வோம் என்று பிசிசிஐ உறுதி கொடுத்தால் மட்டும்தான் விண்ணப்பிப்பேன் என்று அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளையுடன் தலைமை பயிற்சியாளருக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.