ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தானின் தோல்விக்கு கேப்டன் சஞ்சு சாம்சனின் தவறான முடிவுதான் காரணம் என சேவாக் மற்றும் டாம் மூடி இருவரும் விமர்சித்துள்ளனர்.

இது தொடர்பாக டாம் மூடி கூறும்போது, அபிஷேக் ஷர்மா மற்றும் சபாஷ் அகமது ஆகிய 2 இடது கை ஸ்பின்னர்கள் அழுத்தத்தை ஏற்படுத்திய போது இடது கை பேட்ஸ்மேனான கெய்மரை 5-வது இடத்தில் களமிறக்கி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதில் வலது கை பேட்ஸ்மேன் ஆன துருவ் ஜூரேலை களம் இறக்கிய‌ கேப்டனின் முடிவுதான் தோல்விக்கு காரணம் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக சேவாக் கூறும் போது, ராஜஸ்தான் அணியில் ஹெட்மெய்ரை தாமதமாக களம் இறக்கியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவரை முன்னதாகவே ராஜஸ்தான் களம் இறக்கி இருக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் 2 இடது கை ஸ்பின்னர்கள் இருந்தனர். அதை சமாளிக்க இடது கை பேட்ஸ்மேன் விளையாடிவதுதான் சரியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.