ஐபிஎல் இறுதிப் போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் (113/10) படைத்துள்ளது. ஐபிஎல் இறுதி போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியல் பின்வருமாறு, சென்னை சூப்பர் கிங்ஸ் 125-9(மும்பைக்கு எதிராக 2013), ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் 128-6(மும்பைக்கு எதிராக 2017), மும்பை இந்தியன்ஸ் 129-8(சென்னைக்கு எதிராக 2017), ராஜஸ்தான் ராயல்ஸ் 130-9(குஜராத்துக்கு எதிராக 2022). நேற்று ஹைதராபாத் அணி இவ்வளவு மோசமான ரண்களை எடுத்து தோல்வி அடைந்தது ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.