செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்றைய சூழ்நிலைக்கு மக்களுக்கு உதவியாக இருக்கின்ற வகையில்…  எப்படி சென்னையில் பெருகி வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக,  பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடைய வழிகாட்டுதலோடு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எடுத்து வருகின்றதோ,  அதுபோல் அந்த இடத்தில்…. ஏற்கனவே கோயம்பேட்டிலே பயன்பாட்டில் இருந்த…… கோயம்பேடு பேருந்து நிலையம்.

அந்த பேருந்து நிலையத்தை ஒட்டி சுமார் 16 ஏக்கர் இடம் அளவிற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு இடமும் இருக்கின்றது. இவையெல்லாம் ஒருங்கிணைந்து ஒரு பெரிய திட்டத்தை மக்களுடைய பயன்பாட்டிற்கு எது உதவுகிறதோ,  அந்தத் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலோடு….  கொண்டுவர சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு இருக்கின்றது.

ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்தளவில் கிட்டத்தட்ட 86 ஏக்கர் நிலப் பரப்பிலேயே அமைந்திருக்கின்றது. இந்த பேருந்து நிலையத்தில் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் சதுர அடி கட்டுமானம் நடைபெற்று இருக்கின்றது. இந்த பேருந்து நிலையத்திற்கு பல்வேறு தேவைகள் இருந்தாலும் கடந்த காலங்களில் திட்டமிடப்படவில்லை. இந்த ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு தான் பல்வேறு வகையில் திட்டமிட்டு,  சிறிய மழை பெய்தாலே பெருமளவு தண்ணீர் தேங்கி நிற்கின்ற நிலை….  அதை போக்க வேண்டும். என்பதற்காக 13 கோடி ரூபாய் செலவில் மழை நீர் கால்வாய் அமைத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.