இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். பொதுவாக ரயிலில் ஜெனரல் கோச் எனப்படும் பொது பெட்டிகள் முதல் மற்றும் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும். இது ஏன் என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்து உள்ளீர்களா? ஜெனரல் கோச்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

எனவே இந்த பெட்டிகளை ரயிலின் நடுவில் வைத்தால் நடுவில் அதிக எடை இருக்கும். இதனால் ரயிலில் சமநிலை இருக்காது. ரயிலின் முன் பின் பகுதிகளில் பொதுப் பெட்டிகளை இணைப்பதன் மூலம் எடை சமப்படுத்தப்படும். அதேசமயம் இதுதான் பாதுகாப்பானது. இதனால் விபத்து போன்ற அவசர காலத்தில் அதிக பயணிகளுடன் பயணிக்கும் இந்த பெட்டிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றவும் முடியும்.