கேரள மாநிலம் மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் 70 பேர் குழிமந்தி என்ற உணவை சாப்பிட்டு உள்ளனர். அந்த உணவுக்கு சைடிஷ் ஆக மயோனைஸ் தரப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்டு அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் அனைவரும் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மயோனைஸ் உட்கொண்டதே உணவு நச்சுத்தன்மைக்கு காரணம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.