இந்தியர்களின் சமயோசித புத்திக்கு எப்போதும் அளவே கிடையாது. அந்த வகையில், தற்போது இணையத்தை அதிர வைத்து வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் ஒரே ஒரு ஸ்பிளிட் ஏசியை வைத்துக்கொண்டு இரண்டு அறைகளைக் குளிர்விக்கும் வித்தையைக் காட்டியுள்ளார்.
பொதுவாக ஒரு அறைக்கு ஒரு ஏசி என்பதே வழக்கம், ஆனால் இங்கே இரண்டு அறைகளுக்கும் இடைப்பட்ட சுவரைத் துளையிட்டு, ஏசியின் பாதி ஒரு அறையிலும் மீதிப் பாதி அடுத்த அறையிலும் இருக்கும்படி கச்சிதமாகப் பொருத்தியுள்ளனர். பணத்தைச் சேமிக்க அந்த நபர் செய்த இந்த ‘பகீர்’ ஐடியா இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் ‘briefingbharat’ என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது என்னடா புது டெக்னாலஜி!” என வியந்து போனாலும், ஒரு சிலர் இது ஆபத்தானது என்றும் ஏசியின் செயல்திறனை பாதிக்கும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாக இது சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அந்த நபரின் கிரியேட்டிவ் சிந்தனையைப் பார்த்துப் பலரும் வாயடைத்துப் போயுள்ளனர் என்பதுதான் உண்மை.
