பொதுவாக திருடர்கள் மிகவும் திட்டமிட்டு கச்சிதமாக திருட நினைப்பார்கள். ஆனால், சில நேரங்களில் விதி விளையாடும்போது அவர்கள் வாங்கும் அடி மரண அடியாக இருக்கும். அப்படியொரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நள்ளிரவில் ஒரு வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டி உள்ளே நுழைய முயன்ற திருடனுக்கு, அந்த வீட்டின் பாத்திரங்கள் வைத்திருந்த பகுதி எமனாக மாறியுள்ளது.
https://x.com/i/status/2048989303557238986
முதல் சுவரை லாவகமாகத் தாண்டிய அந்த நபர், அடுத்த நிலைக்குச் செல்லும்போது திடீரென பெரும் சத்தம் கேட்கிறது. அடுத்த சில நொடிகளில், மேலிருந்து பொத்தென்று கீழே விழும் அந்தத் திருடன், வலியால் துடிப்பதைக் காண முடிகிறது. பாத்திரங்கள் சரிந்து விழுந்த வேகத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த நபர், காலில் பலத்த காயமடைந்து நொண்டி நொண்டி தப்பியோடுகிறார்.
“இனி இந்த ஜென்மத்தில் அவர் திருட மாட்டார்” என்ற கேப்ஷனுடன் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. “யாராவது அவரைத் தூக்கிப் போட்டார்களா?” என்றும், “திருட்டுத் தொழிலில் 40 வித்தைகள் உண்டு, இவர் மீண்டு வருவார்” என்றும் நெட்டிசன்கள் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.
