மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 26 ஆம் தேதி இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர CUET எனப்படும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு மே 15 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு exams.nta.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்