Mozilla Firefox மீது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபயர்பாக்ஸ் பிரவுசரை (தேடுபொறி) பயன்படுத்தும் போது ஏற்படும் சில பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் Mozilla Firefox பிரவுசரை புதுப்பிப்பதன் மூலம் அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரித்தது.

ஃபயர்பாக்ஸில் உள்ள சிக்கல்களை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கணினி பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்த்து, அதன் மூலம் முக்கியமான தகவல்களை கசியவிடலாம் என்று எச்சரிக்கை கூறுகிறது.