Mozila fire fox மீது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரவுசரை பயன்படுத்தும் போது ஏற்படும் சில பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. ஆனால் இந்த பிரவுசரை புதுப்பிப்பதன் மூலம் அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரித்துள்ளது. பயர்பாக்ஸில் உள்ள சிக்கல்களை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கணினி பாதுகாப்பு அமைப்புகளை தவிர்த்து அதன் மூலமாக முக்கியமான தகவல்களை கசிய விடலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.