ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28ஆம் தேதி சென்னை ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (ஏப்.25) நடைபெறுகிறது. நாளை காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் டிக்கெட் விற்பனை நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை ரூ.1,700 முதல் அதிகபட்சமாக ரூ.6,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.