ஐபிஎல்லில் நேற்று லக்னோவில் நடைபெற்ற  போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணிகள் மோதின. இதனைத் தொடர்ந்து வருகின்ற 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 20ம் தேதி இன்று தொடங்குகின்றது. காலை 10.40 மணிக்கு சிஎஸ்கே இணையதளத்தில் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்றுக் கொள்ளலாம்.