ஐபிஎல் 2024 போட்டிகள் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. இதை தொடர்ந்து களம் இறங்கிய லக்னோ அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சென்னை அணியின் 3-வது தோல்வி ஆகும். இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததற்கு அவர்கள் செய்த தவறுகளே காரணம் என்று கூறப்படுகிறது.

அதாவது பேட்டிங் செய்யும்போது பவர் பிளே ஓவர்களில் ரவீந்திரா டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்ததாக ருதுராஜ் மற்றும் ரஹானே‌ இருவரும் ஆட்டமிருந்து வெளியேறினர். இதனால் பவர் பிளே ஓவர்களில் நல்ல ரன்கள் இருப்பினும் தொடர் விக்கெட் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜடேஜா நம்பர் 4-ல் களம் இறங்கினார். அதே நேரம் தொடக்க வீரராக ருதுராஜுக்கு பதிலாக ரஹானே களமிறங்கியதும் அணிக்கு பின்னடைவாக அமைந்தது‌. அதேசமயம் நேற்று 4 விக்கெட்டுகளை இழந்தபோது இம்பேக்ட் பிளேயராக தோனியை களம் இறக்கவில்லை. அதற்கு பதிலாக சமீர்‌ ரிஸ்வியை களம் இறக்கினார்கள். இதுவும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டது தான் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.