நடப்பு ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல்லில் CSK – MI அணிகள் மீண்டும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போட்டியை பார்க்க ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் நேற்று மே 3ஆம் தேதி முதல்  தொடங்கிய நிலையில் ஆன்லைன் மற்றும் மைதானத்தில் உள்ள கவுண்டரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் 1500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.