இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 55 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு லம்ரோர் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. இந்த அணியில் அதிகபட்சமாக ப்லிப் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். ரீலி ரொசவ் 35 ரன்களும், அசார் பட்டேல் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடினர். இறுதியில் 16.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.