இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் எடுத்து 55 ரன்களில் வெளியேறினார். இந்த மேட்ச்சில் பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அதன் பிறகு 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. இந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இறுதியில் 16.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டியில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அதன்படி இதுவரை 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 46 அரை சதங்களுடன் மொத்தமாக 7036 ரன்களை குவித்துள்ளார். மேலும் இந்த வரிசையில் ஷிகர் தவான் 6,536 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும், டேவிட் வார்னர் 6,189 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்திலும், ரோகித் சர்மா 6,063 ரன்கள் எடுத்து நான்காம் இடத்திலும் சுரேஷ் ரெய்னா 5528 ரன்களுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கிறார்.