இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற 10-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை அதாவது மே 8-ஆம் தேதி தொடங்குகிறது.

அதன் பிறகு ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் 1500 முதல் 3000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நாளை காலை 9 மணியிலிருந்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் 1500, 2000 மற்றும் 2500 ஆகிய விலைகளில் உள்ள டிக்கெட்டுகளை நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெறலாம். ஆனால் 3000 மற்றும் 5000 ரூபாய் மதிப்பிலான டிக்கெட் விலை ஆன்லைனில் மட்டும் தான் பெற முடியும்.