பிரபல அமைப்பான ‘கிளைமேட் சென்ட்ரல்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின் படி, இரவுகளில் அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தங்கள் வாழ்நாளில் ஆண்டுதோறும் சுமார் 93 மணி நேர நிம்மதியான உறக்கத்தை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ‘தூக்கமற்ற தலைநகரமாக’ சென்னை மாறியுள்ளதாகக் கூறப்படும் தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பச் சலனம் இரவு நேரச் சூழல் பொதுமக்களின் இயல்பான தூக்கக் சுழற்சியைக் கடுமையாகப் பாதித்து வருவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரவில் தணிவற்ற உஷ்ணம் நிலவுவதால் மக்கள் உரிய முறையில் ஓய்வெடுக்க முடியாமல் அவதிப்படுவதுடன், இது அவர்களின் உடல் மற்றும் மனநலனையும் பெரிதும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தென்னிந்திய மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்திற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 92 மணி நேரமும், ஆந்திரப் பிரதேசத்தில் 88.6 மணி நேரமும், கேரளாவில் 88.3 மணி நேரமும் என அதிகமான உறக்க இழப்புப் பட்டியலில் இந்தக் பகுதிகள் முன்னணியில் உள்ளன. பருவநிலை மாற்றத்தின் நேரடித் தாக்கத்தால் பெருநகரங்களில் அதிகரித்து வரும் இந்த வெப்ப நிலை மக்களின் அன்றாட ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.