மக்களின் அடையாளப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள புதிய செயலி மூலம், தங்களின் பயோமெட்ரிக் விவரங்களைப் பூட்டி வைக்கும் (லாக்) வசதியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 1.91 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி அடையாளங்களை இந்த செயலி மூலமாக லாக் மற்றும் ஆன்-லாக் செய்து பாதுகாத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கையில் ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதும் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
ஒருவேளை பயோமெட்ரிக் விவரங்கள் லாக் செய்யப்பட்டிருக்கும் போது யாரேனும் அந்த அடையாளங்களைச் சரிபார்க்க முயன்றால், திரையில் ‘330’ என்ற சிறப்புக் குறியீடு மட்டுமே காண்பிக்கப்படும். இது, அந்தப் பயனர் தனது பயோமெட்ரிக் தரவுகளைப் பாதுகாப்பாகப் பூட்டி வைத்திருக்கிறார் என்பதைத் தெரிவிக்கிறார். மீண்டும் தேவைப்படும் போது, அதே செயலியின் மூலம் ‘Un-lock’ செய்து எளிதாகப் பயன்படுத்த முடியும்.
எனவே, பயோமெட்ரிக் தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற பயம் உள்ளவர்கள் இச்செயலியில் உள்ள ‘லாக்’ வசதியைப் பயன்படுத்தி தங்களின் அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இருப்பினும், ஒருவேளை மொபைல் போன் தொலைந்து போனால், மீண்டும் இந்தச் செயலிக்கான அணுகல் அனுமதி பெறும் வரை அடையாளங்களைச் சரிபார்க்க இயலாது என்பதால் பயனர்கள் கவனமாக இருப்பது அவசியமாகும்.
