திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் கூலி வேலை பார்க்கும் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் ஜீவாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் ஜீவாவுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.