தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிராந்தை கிராமம் வழியாக வடவாறு செல்கிறது. அந்த ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணின் முகம் மற்றும் உடல் பகுதி சேதம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.