சென்னை மாவட்டத்திலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறையில் இணை ஆணையர் அந்தஸ்தில் வேலை பார்க்கும் பெண் அதிகாரி வெளியூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது 23 வயது வாலிபர் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெண் அதிகாரி சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் யானைகவுனி பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பவர் பெண் அதிகாரியிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. அவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து போலீசார் அஜித்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். அந்த பெண் அதிகாரியின் கணவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.