புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமநாதன் – தெய்வானை (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் சென்றிருந்த நிலையில் இரவு நேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். அதன் பின் ராமநாதன் தனது மனைவியுடன் அருவிக்கரையின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இருவரும் தனிமையில் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென தெய்வானைக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் ராமநாதன் மடியில் மயங்கி விழுந்தவுடன் அதிர்ச்சியடைந்த ராமநாதன் உறவினர்களை அழைத்தார். பின்னர் தெய்வானையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

அதனை கேட்டு ராமநாதன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் சுற்றுலாவிற்கு வந்த இடத்தில் கணவரின் மடியில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.